WELCOME TO FRENDZ4M
Sun, Mar 3, 2024, 02:16:05 PM

Current System Time:

Get updatesShare this pageSearch
Telegram | Facebook | Twitter | Instagram Share on Facebook | Tweet Us | WhatsApp | Telegram
 

Forum Main>>Regional Clubs>>Tamil>>

தமிழ் புக்ஸ் அறிமுகம்

Page: 1   
bluetigerUser is offline now
PM [480]
Rank : Newbie
Status : Member

#1
நண்பர்களே இங்கு தமிழ் புத்தகங்களை அறிமுகம் செய்யவுள்ளேன். தொடர்ந்து இணைந்திருங்கள். நன்றி.-----------------
3 ❤:
devluv0909,Hbkripcrick,sathish291,

bluetigerUser is not available now
[PM 480]
Rank : Newbie
Status : Member

#2
ஒரு நூல் உலகத்தை ஆட்டிவைக்க முடியுமா?
ஆம் முடியும் என்று நிருபித்திருக்கிறது முன்னாள் அமெரிக்க அதிபர் பாராக் ஒபாமாவின் மிகவும் விருப்பத்துக்குரிய நூல் அவரின் வாழ்வில் மட்டுமல்ல பலரின் வாழ்க்கையிலும் மிகப்பெரிய தாக்கத்தை எற்ப்படுத்தியது இக்கதை. இந்த நூல் உலகத்தை ஆட்டிவைத்த பத்துப் தினைந்து நூல்களுள் ஒன்று என்று அறிஞர்களால் போற்றப்படுகின்றது. இது 1852-ம் ஆண்டில் முதன் முதல் அமெரிக்காவில் ஆங்கிலத்தில் வெளிவந்தது. உடனே 23 மொழிகளில் இது மொழிபெயர்க்கப் பட்டது. பின்னால் இது முக்கியமான உலக மொழிகள் அனைத்திலும் வெளிவந்திருக்கிறது. சென்ற நூற்று ஐம்பது வருடங்களுக்கு மேலாக இந்தக் கதையின் பெருமையும் புகழும் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றது அன்றிக் குறையவேயில்லை.
இந்தக் கதை உள்ளத்தை உருக்கும் மிகச் சிறந்த கதை. அமெரிக்காவிலிருந்த அடிமை முறையைப்பற்றி இது சித்திரித்துக் காட்டுகின்றது. இது வெளிவந்ததால், அமெரிக்க ஐக்கிய மாகாணத்தில், ஆப்பரிக்க கருப்பின மக்களை அடிமைகளாக வைத்துக்கொள்ளும் முறை மாறுவதற்குத் தீவிரமான ஏற்பாடுகள் தோன்றின. அங்கே வடபகுதியிலிருந்த மக்கள் அடிமை முறையை வெறுத்தனர்; தென்பகுதியிலிருந்த மக்கள் அடிமை முறையைத் தீவிரமாக ஆதரித்தனர் இந்த வெறுப்பும் விருப்பும் சேர்ந்து, 1861-ல் இ பகுதிகளுக்கும் பெரிய உள் நாட்டுப் போராக மூண்டு விட்டது. ஆபிரஹாம் லிங்கன் என்ற மாமனிதரால் உள்நாட்டு போர் முடிவுற்று 1865-ல் இரு பகுதிகளும் ஒன்றாகச் சேர்ந்து அடிமை முறையை ஒழிக்கும் சட்டமும் இயற்றபட்டது.
ஆயிரம் போராட்டங்கள் நடத்தியும் சட்டங்கள் இயற்றியும் கொண்டு வர முடியாத சமூதாய சீர்திருத்தத்தை மக்களின் மனதை தொட்டால் முடியும் என்பதை நீருபித்தது இந்தக் கதை பல நூறு வருடங்களாக மக்களின் மனதில் புரையோடிருந்த அடிமைத்தனம்,இனவெறி என்ற நோயை குணமாக்கும் மருந்தாக அமைந்தது இந்நூல்.
மனிதரை மனிதர் அடிமை கொள்ளும் முறையால் ஏற்படும் துயரங்களை யெல்லாம் இந்தக் கதையில் ஆசிரியர் விவரித்துள்ளார். பிற்காலத்தில் அமெரிக்காவில் இந்தத் துயரங்கள் மறைந்து, அடிமை முறையும் சட்டப்படி தடுக்கப் பெற்றுள்ளது.
அடிமை முறை ஒழிக்க அடித்த முதல் அடி இந்நூல. இதன் மூலத்தை சுருக்கி “டாம் மாமா” என்ற பெயரில் ஆசிரியர் தமிழில் மொழிப்பெயர்த்துள்ளார்.

bluetigerUser is not available now
[PM 480]
Rank : Newbie
Status : Member

#3
image
--------- Post edited by - bluetiger
bluetigerUser is not available now
[PM 480]
Rank : Newbie
Status : Member

#4
இன்றைய தேதியில் இளைஞர்கள் மத்தியில் YouTube வீடியோ பார்ப்பது மிகவும் பிரபலம். Google க்கு அடுத்த படியாக உலகின் இரண்டாவது மிகப் பெரிய search engine ஆக YouTube இருக்கின்றது என்று பல தகவல்கள் கிடைக்கின்றன.. இந்த YouTube ல் vlog என்று சொல்லக் கூடிய பயண அனுபவங்கள் பற்றிய காணொளிகள் மிகவும் பிரபலம். ஒரு ஆன்மீகத் தலத்திற்குச் செல்லும் vlog ஆக ஒரு புத்தகம் இருந்தால் எப்படியிருக்கும்.. அப்பேர்ப்பட்ட ஒரு புத்தகம் தான் திரு. கானமஞ்சரி சம்பத்குமார் என்பவர் எழுதிய “சித்தர்கள் காட்சி தரும் சதுரகிரி மலை” என்ற புத்தகம். மிகச் சிறிய புத்தகம் தான்..
புத்தகத்தைப் படிக்க ஆரம்பிக்கும் போது சித்தர்களைப் பற்றி நவீன வடிவில் புராணக் கதைகளைத் தான் எழுதியிருக்கின்றார் என நினைத்து படிக்க ஆரம்பித்தேன்... ஆனால் புத்தகத்தின் பக்கங்களைப் புரட்டி தொடர்ந்து பயணிக்கும் போது தான் சதுரகிரி என்பது எப்பேர்ப்பட்ட ஒரு தலம் என்பது புரிய ஆரம்பித்தது...எம்பெருமான் சிவனின் வசிப்பிடம் என்ற சிறப்பு ஒரு பக்கம்.. இங்கு சுந்தர மகாலிங்கம் மட்டுமில்லை.. இன்னும் பல்வேறு லிங்கக் கடவுளரும் மற்றும் பல தெய்வங்களும் இருக்கின்றனர் என்ற தகவல்கள் மற்றொரு பக்கம்..
இவை எல்லாவற்றிற்கும் மேலாக அகத்தியர் முதல் பல்வேறு சித்தர்களும் தங்கி இருந்த ஆசிரம கட்டிடங்கள், மகத்துவம் பொருந்திய பல்வேறு நோய் தீர்க்கும் சுனை தீர்த்தங்கள் இப்படி வாழும் வரலாற்று ஆதாரங்கள் எனக்குள் இருக்கும் சித்தர்கள் பற்றிய ஆர்வத்தை வெகுவாக தூண்டியிருக்கின்றன...
சதுரகிரி மலைக்குச் செல்ல நூலாசிரியரின் வாழ்வில் நடந்த அதிசயத்தில் தொடங்கி நம்மை சதுரகிரி மலையின் உள்ளே அவருடனேயே அழைத்துச் செல்கின்றார்... அங்கிருக்கும் மூலிகைகள், தீர்த்தங்கள் என அடுக்கியிருக்கிறார்...
எனது வாழ்வில் அடிக்கடி செல்ல வேண்டிய முக்கிய இடங்களின் பட்டியலில் சதுரகிரியையும் சேர்த்துக் கொண்டேன். சிவனருளால் விரைவில் சதுரகிரி செல்வேனென்று நினைக்கிறேன்...
பதிவை முழுமையாகப் படித்ததற்கு நன்றி.

image
bluetigerUser is not available now
[PM 480]
Rank : Newbie
Status : Member

#5
“காலம் என்கிற வங்கியில் ஒரு சேமிப்புக் கணக்கு உள்ளது...அதில் தினமும் காலையில் 86,400 நொடிகள் வரவு வைக்கப் படும்...ஒவ்வொரு இரவிலும் அதை நீங்கள் செலவிட்டு விட்டதாய் கணக்கிடப் பட்டுவிடும்...இருப்பில் எதுவும் இருக்காது...” எவ்வளவு பொருள் பொதிந்த வரிகள்... நான் இப்போது கொண்டிருக்கும் சோம்பேறித் தனத்தைப் பற்றி கொஞ்சம் உரக்கச் சொன்ன வரிகள் இவை. “உங்களின் செல்வாக்கை உயர்த்திக் கொள்ளுங்கள்” என்ற தலைப்பில் திரு. சி. எஷ். தேவனாதன் என்ற ஆசிரியர் எழுதிய புத்தகத்தின் சில முக்கிய வரிகள் தான் மேலே சொன்னவை.
என்னைப் பொருத்தவரை இந்த புத்தகத்தை யார் படித்தாலும் ஆசிரியருக்கு என்னைப் பற்றி எப்படித் தெரியும்.. என்னைப் படித்துப் பார்த்தது போலவே எழுதியிருக்கிறாரே என்று நினைக்கத் தோன்றும். அந்த அளவிற்கு நம்மைத் தொடர்பு படுத்திப் பார்க்க வைத்திருக்கிறார்...
அப்படி என்ன இந்தப் புத்தகத்தில் வழிமுறைகளைச் சொல்லியிருக்கிறார் என்று கேட்டால் எனது ஒரே பதில் - நமக்குத் தெரிந்த நேர மேலாண்மை, நண்பர்களைப் பெற்று முன்னேறுதல், இலட்சியப் பாதையில் எப்படிப் பயணிப்பது என்பது போன்ற விஷயங்கள் தான். பிறகு எதற்கு இந்தப் புத்தகத்தைப் படிக்க வேண்டுமென்று கேட்கிறீர்களா..?? மேலே சொன்ன பழக்கங்களையெல்லாம் நாம் ஒழுங்காகக் கடைப்பிடிக்கிறோமா.. இல்லாவிடில் அதன் விளைவுகள் என்ன.. வெற்றி பெற்ற பலர் பயன்படுத்திய சூத்திரங்களும் வழிமுறைகளும் என்னென்ன.. என்று இந்தப் புத்தகத்தில் சொல்லப் பட்டிருக்கும் பல விசயங்கள் நமக்குக் கண்டிப்பாக புத்துணர்ச்சியைத் தரும்.
மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு புத்தகத்தின் பல பக்கங்களில் கொடுக்கப்பட்ட வாசகங்களை நான் குறித்து வைத்துக் கொண்டதும், எப்போதெல்லாம் சோர்வடைகின்றேனோ அப்போதெல்லாம் நான் மறுபடியும் படிக்க நினைக்கும் ஒரு புத்தகமும் கண்டிப்பாக இது தான்...
எனது அலுவலக மேலாளர் எப்போதுமே என்னை ஒரு சிறந்த பணியாளனாக அங்கீகரிப்பதில்லை என்று புலம்பும் என்னைப் போன்ற சிலரும், எனக்கு நேரமிருந்தால், எனக்கு வாய்ப்பு கிடைத்திருந்தால் நான் என்னவெல்லாம் சாதித்திருப்பேன் தெரியுமா? என்று யோசிக்கும் சிலரும் கண்டிப்பாக இந்த புத்தகத்தைப் படித்தால் தங்களுக்குரிய வாய்ப்புகளை உருவாக்கி தாம் சார்ந்த துறையில் முக்கியத்துவம் பெற கண்டிப்பாக உதவியாக இருக்கும்...
பதிவின் இறுதியாக இந்தப் புத்தகத்தின் மற்றொரு பொன்னான வரி இங்கே உங்களுக்காக...
“வாழ்வின் மகத்தான தருணங்கள், தாமே வருவதல்ல.. உருவாக்கப் படுகிறவை...”
உங்களுக்கும் நேரம் அனுமதித்தால் படித்துப் பாருங்க...
பதிவை முழுமையாகப் படித்ததற்கு நன்றி.

image
bluetigerUser is not available now
[PM 480]
Rank : Newbie
Status : Member

#6
Sales job - உங்களைப் போலவே எனது professional Careerஇன் ஆரம்ப காலங்களில் பல பேர் என்னை விற்பனைப் பிரதிநிதியாக வேலை செய்ய அழைத்ததுண்டு.. ஒரு சராசரி பொது மனிதனின் சிந்தனை போலவே எனது சிந்தனையும் “ நேரத்துக்கு ஆபிசுக்கு போக தேவையில்ல... நல்ல நண்பர்கள் நிறைய பேர் கிடைப்பாங்க.. நிறைய விஐபி contacts கிடைக்கும்... நல்லா sales பன்னினா நிறைய incentives கிடைக்கும்... எல்லாம் சரி தான்... ஆனா சரியா sales targets achieve பன்னலைனா மாச சம்பளத்திற்கு உத்திரவாதம் கிடையாதே...” இப்படித் தான் யோசித்திருக்கிறேன்... இன்று கிட்டத்தட்ட 17 வருடங்கள் உருண்டோடி விட்டன... ஆபிஸில் உட்கார்ந்து கம்ப்யூட்டரில் வேலை பார்த்தே இத்தனை வருசமா சம்பாரிச்சுட்டோமே... இதை விட sales job கஷ்டமாவா இருந்திருக்கும் என்று தோன்றுகிறது...
No.1 sales man என்ற திரு. சோம வள்ளியப்பன் அவர்கள் எழுதிய தமிழ் புத்தகம் தான் இன்று நான் படித்து முடித்தது... பொதுவாக நான் நிறைய digital சம்பந்தமான corporate training session எடுக்கும் போது அங்கே அமர்ந்திருக்கும் பார்வையாளர்களைப் பார்த்து தவறாமல் பின் வரும் வாக்கியங்களைச் சொல்வேன்...
“இங்கே நான் சொல்லித் தர வரவில்லை.. அடுத்த சில மணிகளுக்கு நானும் நீங்களும் கலந்துரையாடப் போகிறோம்... நான் சொல்லப் போகும் எல்லா விசயங்களும் சரி என்று நீங்க ஏற்றுக் கொள்ள வேண்டிய அவசியமில்லை, நீங்க கேள்வி கேட்கலாம்.. எனக்கு பதில் தெரிந்தால் சொல்வேன்.. தெரியவில்லை என்றால் உங்களிடம் அல்லது பதில் தெரிந்தவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொண்டு நான் கற்றுக் கொள்வேன். ஒரு வேளை உங்களில் யாராவது கேள்வி கேட்காமல் அமைதியாக இருந்தால் நான் அந்த நபரைக் குறிப்பிட்டு தனியாக கேள்வி கேட்பேன்...” இந்த வாக்கியங்கள் தான்...
நமது ஆசிரியர் எழுதிய சேல்ஷ்மேன் புத்தகத்தைப் படித்த பிறகு மேலே நான் பயன்படுத்தியது எல்லாம் இன்னும் பட்டை தீட்டப் பட வேண்டிய மிக முக்கிய திறமைகளுல் ஒன்று என தெரிந்து கொண்டேன்...
Sales என்ன பெரிய கம்ப சூத்திரமா என்று கேட்பவர்கள் மற்றும் sales அடிப்படை தெரிந்து கொள்ள விரும்புபவர்கள் கண்டிப்பாக இந்த புத்தகத்தைப் படிக்கலாம்...
எல்லாவற்றிர்கும் மேலாக நம்மை நம் தொழில் ஒழுக்கத்தை சுய பரிசோதனை செய்து கொள்ள அனைத்து தரப்பினரும் ஒரு முறை இந்த புத்தகத்தைப் படித்து புத்துணர்ச்சி பெறலாம்...
நேரமிருந்தால் படித்துப் பாருங்க...
பதிவை முழுமையாக படித்ததற்கு நன்றி...

image
bluetigerUser is not available now
[PM 480]
Rank : Newbie
Status : Member

#7
தமிழரின் வரலாற்றைத் தெரிந்து கொள்ள அனேக வாசகர்கள் தேடிப் படிப்பது சுமார் 2500 வருடம் முந்தைய வரலாறு, தொல்லியல் அகழாய்வு பற்றிய புத்தகங்கள் போன்றவை தான்... ஆனால் சுமார் 30,000 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த வரலாற்றைப் பற்றி..?? சுமார் 50,000 ஆண்டுகள்...?? இன்னும் சற்று பின்னோக்கிச் சென்று சுமார் ஒரு லட்சம் ஆண்டுகள்...?? இப்பேர்ப் பட்ட ஒரு வரலாற்றைத் தான் “குமரிக் கண்டம் அல்லது கடல் கொண்ட தென்னாடு” என்ற அரிய நூலை திரு. அப்பாத்துரைப் பிள்ளை அவர்கள் சைவ சித்தாந்த நூற் பதிப்புக் கழகம் மூலமாக நமக்குப் படைத்திருக்கிறார்...
லெமூரியாக் கண்டம் - உலகின் முதல் உயிரினம் தோன்றிய இடம் என்று நம்மில் பலர் கேள்விப் பட்டிருப்போம்... எப்படி இந்த லெமூரியாக் கண்டம் என்ற நிலப்பரப்பு உருவாகியிருக்க முடியும்..?? அங்கு மனித குலத் தோன்றல் எப்போது நடைபெற்றிருக்கும்... தமிழரின் புதையல் காப்பியமான தொல்காப்பியம் இதற்கு எப்படி சான்று தருகின்றது என ஒரு ஆராயச்சி நூலாக அருமையாக வடித்திருக்கின்றார் ஆசிரியர்...
உலகின் முதல் மனிதன் தோன்றிய காலமும் முதல் தமிழ் சங்க காலமும் ஒன்றாக இருப்பதை வைத்து உலகின் முதல் மனித குலம் தமிழ்க் குலம் என்று நிரூபித்தல், இன்று நடப்பது போல மத மாற்றம், மத வெறுப்பு மற்றும் மத வெறி அரசியல் என்று எதுவும் இல்லாமல் பல நூறாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உருவ வழிபாடு மூலமாக இறை வழிபாடு நடத்தி கடவுள் மறுப்பாளர் அற்ற நிம்மதியான உலகமாக அமைந்தமை, மிக முக்கியமாக லெமூரியா கண்டத்தின் வரைபடம் என்று கற்காலத்திற்கு நாம் பயணிப்பது அரிதினும் அரிதான அனுபவம்...
இறுதியாக ஒரு வரி... 30,000 ஆண்டுகளுக்கும் மேலாக நிலைத்து நிற்கும் கோவில்கள் லெமூரியாக் கண்டத் தமிழனின் கட்டிடக் கலை அறிவின் சான்று எனக் குறிப்பிடும் இடம் உச்சகட்ட ஆச்சரியம்...
இதிகாசங்கள் மற்றும் புராணங்கள் கற்பனைப் புனைவா இல்லை நிஜத்தில் நடந்தவையா என்ற விவாதத்தையெல்லாம் பொருளற்றதாக்கி அவை அனைத்திலும் கிடைக்கும் உண்மைகள் லெமூரியாக் கண்டத் தமிழன் முதல் ஒவ்வொரு யுகத்திற்கும் ஆதாரம் கொண்டவை என குறிப்பிட்டுள்ளார்...
அரிதினும் அரிதான புத்தகம்... தற்போது பதிப்பில் இருக்கின்றதா என தெரியவில்லை...
நேரமிருந்தால் படித்துப் பாருங்க...
பதிவை முழுமையாகப் படித்ததற்கு நன்றி.

image
bluetigerUser is not available now
[PM 480]
Rank : Newbie
Status : Member

#8
ஒரு பொது ஜன மனிதனாக விண்வெளிக்கு செயற்கை கோள்கள் அனுப்புவதை பற்றிய செய்திகளைத் தொலைக்காட்சியில் பார்க்கும் போது “ இவங்க அனுப்பிகிட்டே இருக்காங்க... இதுக்கு செலவு பன்ற காசை வேற ஏதாவது ஆக்கப் பூர்வமா செலவு செய்யலாமே” அப்டினு ரொம்ப ஈசியா கமெண்ட் சொன்ன பல பேரில் நானும் ஒருவன்.. ஆனால் இந்த ஒரு புத்தகம் தான் எனக்கு மிகப் பெரிய eye opener ஆக இருந்தது.. ஒவ்வொரு செயற்கை கோள் அனுப்புவதற்கு பின்னால் இருக்கும் அரசியல் காரணங்களில் ஆரம்பித்து அந்த செயற்கை கோளின் வெற்றிக்காக பாடுபடும் குழு வரையிலும் ஒரு முழுமையான அறிவைப் பெற்றிட முடிகின்றது...
ஒவ்வொரு கிரகத்திலும் என்ன இருக்கின்றது.. நமது செயற்கை கோள்கள் எடுத்து அனுப்பிய தகவல்கள் நமக்கு என்ன கற்றுக் கொடுத்தன... ஒரு குழந்தையை வளர்ப்பது போல நமது விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் ஒரு செயற்கை கோளை உருவாக்கி அது தன் பணிகளை முடித்துக் கொண்டு பல வருடங்களுக்கு பிறகு காற்றோடு காற்றாக கலந்து மறையும் போது ஆராய்ச்சியாளர்களின் மன வலி என்ன என்பது போன்ற பல உணர்வுகள் கொடுக்கும் அருமையான புத்தகம் தான் “விண்வெளியில் மனித சாதனைகள்” என்ற தலைப்பில் திரு. ச. நாகராஜன் என்ற ஆசிரியர் எழுதிய புத்தகம்...
எனது சிற்றறிவிற்கு எட்டிய வரை என்னைப் போன்ற பொதுவெளி மனிதர்கள் முழுவதுமாக மனப்பாடம் செய்து கொள்ள வேண்டிய ஒரு புத்தகமாக இதைப் பார்க்கின்றேன்... ஒரு முழுமையான தகவல் களஞ்சியம்... மொத்தம் மூன்று பாகங்கள்.. நான் இப்போது தான் முதல் பாகம் படித்து முடித்திருக்கிறேன்... நேரமிருந்தால் நீங்களும் படியுங்க...
பதிவை முழுமையாகப் படித்ததற்கு நன்றி.

image
bluetigerUser is not available now
[PM 480]
Rank : Newbie
Status : Member

#9
பேருந்தில் பயணம் என்றாலே சிறு வயது முதலாகவே எனக்கு அதிக பயம் தான். காரணம் - பேருந்து பயணத்தின் போது எனக்கு குமட்டல் ஏற்பட்டு வாந்தி வரும் என்பது தான். படித்து முடித்து நான் சென்ற முதல் வேலையில் மாத சம்பளம் 1500 ரூபாய். (2004ம் வருடத்தில்) ஒவ்வொரு மாநிலத்திலும் இருக்கும் இரண்டு சக்கர வாகனங்களின் டீலர் அனைவருக்கும் புதிய transaction software ஐ implementation செய்து training கொடுத்து அவர்களைப் பயன்படுத்த வைத்து implementation நன்றாக முடிந்தது. புதிய software நன்றாக நல்ல features உடன் இருக்கின்றது என்று அந்த கம்பெனி MD யிடம் கையெழுத்திட்ட ரிப்போர்ட் வாங்கி வர வேண்டும். இது தான் எனது பிரதான வேலை. மேலோட்டமாக பார்ப்பதற்கு எளிதாகத் தெரிந்தாலும் சற்று பெரிய சவால்கள் காத்திருந்தன...என்ன தான் ரயிலில் பயணம் செய்தாலும் சில ஊர்களுக்கு பேருந்து பயணம் தவிர்க்க முடியாதது. எப்படி எனது குமட்டலை சமாளிப்பது..?? நான் செல்லும் இடம் உதாரணத்திற்கு ஆந்திரா என்றால் அங்கு வேலை செய்பவர்களுக்கு தெலுங்கு மட்டும் தாம் தெரியும். எனக்கு தமிழும் ஆங்கிலமும் மட்டும் தான் தெரியும்.. எப்படி software implementation project ஐ வெற்றிகரமாக முடிப்பது.. இப்படி பல கேள்விகளுடன் தான் ஆரம்பித்தேன் எனது தொழில் வாழ்வை... ஆனால் ரிஸ்க் எடுத்துப் பார்ப்போமே என்று மனதில் ஒரு தைரியத்தை ஏற்படுத்திக் கொண்டேன்... தயங்காமல் பயணம் செய்தேன் பேருந்துகளில். முதல் சில நாட்கள் பட்டினியாக (குமட்டல் தவிர்க்க). பிறகு சில நாட்களில் முழு வயிற்றுக்கும் சாப்பிட்டு விட்டு பயணம். குமட்டல் காணாமல் போனது.. சென்ற ஒவ்வொரு மாநிலத்திலும் அவர்களது தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என்று புரிந்து கொள்ள முயற்சி செய்தேன். அவர்களின் மொழியில் நான் காட்டிய ஆர்வம் எளிதாக என்னை அவர்களின் உற்ற நண்பனாக்கியது... விளைவு மூன்று மாதங்களில் team lead ஆனேன்...
இன்று கிட்டத்தட்ட 17 வருடங்கள் ஓடி விட்டது.. “பிரசன்னா... எங்கே சென்றது உன்னுடைய ரிஸ்க் எடுக்கும் குணம்..?? பங்கு சந்தையில் ஆரம்பித்து தொழில் தொடங்கும் முயற்சி வரை ஏன் எல்லாவற்றிலும் பயம்...?” - “ரிஸ்க் எடு தலைவா” - திரு. சிபி கே சாலமன் என்ற ஆசிரியர் எழுதிய புத்தகத்தைப் படித்த பிறகு எனது மனம் என்னிடம் கேட்ட கேள்விகள் தான் இவை... சோர்வாக இருந்தாலோ அதிக எதிர்மறை எண்ணங்கள் தோன்றினால் கண்டிப்பாக இந்த புத்தகத்தை படியுங்க. மிகப் பெரிய் உற்சாகம் எனக்கு கிடைத்ததைப் போல உங்களுக்கும் கிடைக்கும்...என்னை மீறி என் வாழ்க்கையில் யாரும் எதுவும் செய்து விட முடியாது என்று ஒரு தைரியம் வரும்...எல்லாவற்றிர்கும் மேலாக மாற்றத்தை ஏற்றுக் கொள்ளும் மனப் பக்குவம் வரும்...
இனி மேல் எனக்கும் ரிஸ்க் எடுக்குறதெல்லாம் ரஷ்க் சாப்பிடுற மாதிரித் தான்...?
நேரமிருந்தால் படித்துப் பாருங்க...
பதிவை முழுமையாக படித்ததற்கு நன்றி.

image
bluetigerUser is not available now
[PM 480]
Rank : Newbie
Status : Member

#10
திரு. பாலா ஜெயராமன் அவர்கள் எழுதிய “அணுகுண்டின் அரசியல் வரலாறு” என்ற கிழக்கு பதிப்பகத்தின் 2014ம் ஆண்டு வெளிவந்த நூல் தான் இன்று நான் படித்து முடித்த புத்தகம். பக்கங்களைப் புரட்டப் புரட்ட எவ்வளவு தகவல்கள்... பிரமிப்புடனேயே எனது வாசிப்பு தொடர்ந்தது... இன்று நாம் அனைவரும் தொடர்ச்சியாக தொந்தரவுக்கு உள்ளாகும் மத மாற்று தொழில், மத வெறுப்பு அரசியல், மத வெறி அரசியல் மற்றும் மதத்தை அழிக்கும் முயற்சிகள் இதுவெல்லாம் உலக அரசியலின் மொத்த அளவில் 0.000000001% கூட இல்லை. இந்த சிறிய பிரச்னைகளின் தாக்கமே நமக்கு வெகு தீவிரமாக இருக்கிறதே...அணுகுண்டு - எவ்வளவு பெரிய எமன்...!!! ஆக்க சக்தியாகப் பயன்படுத்தியிருக்க வேண்டிய அணு சக்தி, முழுக்க முழுக்க நாட்டை ஆண்டோர் மற்றும் முட்டாள் தனமான மக்கள் ஆகியோரின் வறட்டு பிடிவாதம் மற்றும் வீண் கௌரவம் காரணமாக பேரழிவை உண்டாக்கும் எமனாக மாறிப் போயிருப்பதை புரிந்து கொள்ள முடிந்தது...
இனி ஒரு அணு ஆயுதப் போர் வந்தால் மனித இனம் எப்படி அழிந்து போகும் என்று தெளிவாக ஆசிரியர் உணர்த்தி இருக்கிறார். நேரமிருந்தால் படித்துப் பாருங்க...
பதிவை முழுமையாகப் படித்ததற்கு நன்றி.

image
bluetigerUser is not available now
[PM 480]
Rank : Newbie
Status : Member

#11
முதலாவது கரிகாலன் என்கிற சோழன் கரிகால் பெரு வளத்தானைப் பற்றிய ஆராய்ச்சி நூல் - திரு. உலகனாதப் பிள்ளை அவர்களால் இயற்றப் பெற்ற புத்தகம்... குறைந்த பக்கங்களைக் கொண்ட புத்தகம் என்றாலும் எனக்கு இதனைப் படிக்க சற்று நேரம் அதிகம் எடுத்தது...1913ல் அன்றைய சுத்தத் தமிழில் எழுதப்பட்டிருந்தது தான் காரணம்...உதாரணத்திற்கு “தமக்குப் போதுமான விடம் நாடுதற் காரணமாகத் தென்னாடுகளிற் புகுந்து” என்று ஒரு வரி குறிப்பிடப் படுகின்றது. இன்றைய பேச்சுத் தமிழில் இது போல நாம் புத்தகங்களிலும் பார்க்க முடிவதில்லை.
வரலாறு என்பது கிடைக்கப் பெறுகின்ற ஆதாரங்களையும் தரவுகளையும் வைத்து யூகிக்கப் படுவது தான் என்ற புரிதலை உறுதியாக நம்புகிறேன் நான்... அதனால் இது சரி, இது தவறு என்று எந்த ஒரு தலைப் பட்சமும் இல்லாமல் படிக்க ஆரம்பித்தேன். தமிழ் இலக்கியங்கள், சேர மற்றும் பாண்டிய மன்னர் வரலாறு, ஆதாரங்கள் என அனைத்தையும் ஒப்பிட்டு ஒரு அருமையான நூலாகப் படைத்திருக்கிறார் ஆசிரியர்...முதலாம் கரிகாலன், இரண்டாம், மூன்றாம், நான்காம் கரிகாலன் என ஒவ்வொருவரும் யார் யார், மற்றும் முதலாம் கரிகாலனின் வீரம், ஆட்சி முறை, கடவுள் பக்தி என அனைத்தையும் விவரிப்பது ஒரு நல்ல முழுமையைத் தருகின்றது...
நேரமிருந்தால் நீங்களும் படித்துப் பாருங்க...
பதிவை முழுமையாகப் படித்ததற்கு நன்றி.

image
bluetigerUser is not available now
[PM 480]
Rank : Newbie
Status : Member

#12
“இந்த நாடு முழுவதும் இயற்கை விவசாயத்திற்கு மாறினால் அனைத்து மக்களுக்கும் நஞ்சில்லா உணவு கிடைக்குமே...!!! இதன் மூலமாக பலவிதமான புது நோய்கள் உருவாவதைக் குறைத்து மக்களின் நோய் எதிர்ப்பு சக்தியை பிறக்கப்போகும் குழந்தை கருவிலிருக்கும் போதே உயர்த்தலாமே...!!!” - இன்றைய நிலையில் நாம் யாரிடமாவது மேலே கூறியது போல் சொன்னால் பெரும்பாலும் நமக்குக் கிடைக்கும் பதில் - “இயற்கை விவசாயமெல்லாம் பேச்சுக்கு வேண்டுமானால் தேனாக இனிக்கலாம்... நடைமுறைக்கு சாத்தியமில்லை. அன்றைக்கு நமது தாத்தா பாட்டி காலத்திய மக்கள் தொகைக்கு குறைவான உணவு உற்பத்தி போதுமானதா இருந்துச்சு... அதனால இயற்கை விவசாயம் சாத்தியமாச்சு... இன்னைக்கு இருக்கிற மக்கள் தொகைக்கு இதெல்லாம் சாத்தியமே இல்லை...இன்னைக்கு food industry யில் demand vs supply ratio என்னன்னு தெரியுமா.. சும்மா எல்லாம் தெரிஞ்ச மாதிரி பேசாதீங்க...” இப்படித்தான்..
சில நாட்களில் இவர்கள் சொல்வது சரிதானோ என்று நானும் யோசித்திருக்கிறேன்... “எந்நாட்டுடைய இயற்கையே போற்றி” என்ற தலைப்பில் ஐயா கோ. நம்மாழ்வார் எழுதிய புத்தகத்தில் எனக்கு விடைகள் கிடைத்தன... நாட்டு மாட்டு சாணத்தை பயன்படுத்தினா போதும், அது தான் இயற்கை விவசாயம், இரசாயன உரங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்த்தால் போதும், அது தான் இயற்கை விவசாயம் என்று இயற்கை விவசாயத்தை ஒரு பத்தியில் எழுதி முடிக்கும் அரைகுறை புரிதலை ஒழித்துக் கட்ட ஐயா நம்மாழ்வார் அவர்கள் விகடனில் எழுதிய 19 தொடர் கட்டுரைகளின் தொகுப்பு தான் இந்த புத்தகம்.
இதைப் படிக்க நாம விவசாயியாக இருக்க வேண்டிய அவசியமில்லை... இயற்கையைப் புரிந்து கொள்ளும் ஆர்வமும் தேடலும் மட்டுமே போதும்... தேவையில்லாமல் புரட்சி, போராட்டம் என்று எதிர்மறை எண்ணங்களை விதைக்காமல் வெகு அருமையாக இயற்கை விவசாயத்தின் அவசியத்தையும் ஒவ்வொரு நாட்டு அரசாங்கமும் தவறு செய்து கைகளை சுட்டுக் கொண்டு பிறகு தங்களது அணுகுமுறையை மாற்றிக் கொள்வதையும் மிக நேர்த்தியாக கட்டுரைகளில் சொல்லியிருக்கிறார்.
அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம்...
நேரமிருந்தால் படித்துப் பாருங்க...
பதிவை முழுமையாக படித்ததற்கு நன்றி.

image
bluetigerUser is not available now
[PM 480]
Rank : Newbie
Status : Member

#13
ஏப்ரல் 2019ல் முதன் முதலாக விண்வெளியில் இருக்கும் ஒரு முக்கிய கருந்துளையை வெற்றிகரமாக நமது விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகள் படம் பிடித்து விட்டனர் என்று நாமனைவரும் செய்தி கேள்விப் பட்டிருப்போம்... தொலைக்காட்சியில் இந்த செய்தியைப் பார்க்கும் போது பெரிய அளவில் கொண்டாடுவதற்கு அப்படி என்ன இந்த நிகழ்வில் இருக்கின்றது.. பார்ப்பதற்கு ஏதோ உளுந்து வடையை மங்கலாக படம் பிடித்தது போல இருக்கின்றது என்று நானும் முனுமுனுத்ததுண்டு...ஆனால் நேற்று தமிழில் அறிவியல் காதலன் திரு. ரா. பிரபு என்பவர் இந்த கருந்துளை பற்றி ஒரு கட்டுரை எழுதியிருந்ததைப் படித்தேன். சுமார் 29 பக்கங்கள் கொண்ட கட்டுரை. மொத்த உலக விண்வெளி பணியாளர்களும் எந்த அளவிற்கு முயற்சி எடுத்தனர்.. டைம் டிராவல் என்று சொல்லக் கூடிய காலத்தின் பின் நோக்கிய அல்லது முன் நோக்கிய பயணத்திற்கு இந்த புகைப்படம் எப்படி ஒரு ஆரம்பப் புள்ளியாக இருக்கப் போகின்றது என்பது பற்றி ஒரு பாமரனும் புரிந்து கொள்ளும் அளவிற்கு மிக அருமையாக எழுதியிருந்தார்... கருந்துளையிலிருந்து 55 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் பட்டுத் தெறித்த மீதி ஒளியின் நிழல் தான் நமக்கு புகைப்படமாகக் கிடைத்திருக்கிறது என்பது அந்தக் கட்டுரையின் ஒரு முக்கியமான வரி...
இந்த கட்டுரை புத்தகமாக வெளிவந்ததாகத் தெரியவில்லை. முகனூலில் மட்டுமே இந்த கட்டுரையை பதிவிட்டிருக்கிறார் என்று நினைக்கிறேன்... அருமையான கட்டுரை. நேரமிருந்தால் படித்துப் பாருங்க.

image
bluetigerUser is not available now
[PM 480]
Rank : Newbie
Status : Member

#14
இயற்கையை மனிதன் அழிக்கின்றான் என்று ஒரு தரப்பும், பெருகி வரும் மக்கள் தொகைக்கு வேறு எப்படி வசிப்பிடத்தை உருவாக்க முடியும் என்று மற்றொரு தரப்பும் தொடர்ந்து வாத விவாதங்கள் செய்வது நம் எல்லோருக்கும் தெரிந்த ஒரு நிகழ்வு தான்.. சூழலியல் ஆர்வலர்கள் என்று நமது தனியார் தொலைக்காட்சிகளின் மூலமாக பலர் கட்டமைக்கப் படுவதையும் உருவாக்கப் படுவதையும் நாம் தொடர்ந்து பார்த்துக் கொண்டு தானிருக்கிறோம்...இதில் எது ஞாயம் எது தவறு என்று பார்ப்பதை விட மனித குலத்தின் ஒரு பகுதி இயற்கையைக் காப்பாற்ற தனது மனித குலத்திற்கே மரணத்தினும் கொடிய தண்டனை கொடுத்தால்...???!!! நினைத்துப் பார்க்க சற்று பயமாக இருக்கிறதல்லவா...
இந்த மாதிரி ஒரு சிறுகதைப் புத்தகம் தான் திரு. சுரேஷ் பாலா (எ) சுபா அவர்கள் எழுதிய “அடிமை ராஜ்யம்” என்ற புத்தகம்.. தொடக்கத்திலிருந்து இறுதி வரை விறுவிறுப்பு குறையவில்லை... அறிவியலின் துணை கொண்டு இயற்கையை அழிக்கும் மனித குலத்திற்கு தண்டனை கொடுக்கும் கதைக் கருவும் அதனை ஆசிரியர் கையாண்ட விதமும் மிக அருமை...படித்து முடித்த பிறகு கொஞ்சம் யோசித்தால் மனிதனுக்கு தேவையில்லாத இயற்கை உயிரினங்கள் அனைத்தும் அழிக்கப் படுவது பற்றியும் அதனால் நாம் அடையப் போகும் விளைவுகள் பற்றியும் கொஞ்சம் பீதியாகத் தானிருக்கிறது...???
சுமார் ஐம்பது பக்கங்கள் கொண்ட புத்தகம் தான். நேரமிருந்தால் படியுங்க...
பதிவை முழுமையாகப் படித்ததற்கு நன்றி.

image
HbkripcrickUser is not available now
[PM 88]
Rank : Newbie
Status : Member

#15
மிக்க நன்றி
BannedUser is not available now
[PM 615]
Rank : Beginner
Status : Member

#16
samajh nhi aa raha
kavi1994User is not available now
[PM 422]
Rank : Junkie
Status : Member

#17
Ponniyin selvan

--------- Post edited by - Kavi1994
Reply
You are not logged in, please

Login

Page: 1   

Jump To Page:

Keywords:,
Related threads:

Daily Physical Exercises Everyone Must DoThis trick will keep you away from premature aging


Indian Polity by M Lakshmikanth book review


INDIAN ECONOMY by GAURAV AGARWAL BOOK REVIEWTERMS & CONDITIONS | DMCA POLICY | PRIVACY POLICY
Home | Top | Official Blog | Tools | Contact | Sitemap | Feed
Page generated in 0.55 microseconds
FRENDZ4M © 2024